தேங்காய் தட்டுப்பாட்டுக்கான காரணத்தை வெளியிட்டார் ஜனாதிபதி ! January 7, 2018

நாட்டில் பாரிய பிரச்சினையாக ஏற்பட்டுள்ள தேங்காய தட்டுப்பாட்டிற்கு காரணம் என்னஎன்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

காணிகள் தொடர்பில் உரிய கொள்கைகள் பின்பற்றப்படாமையே, இன்று பாரியபிரச்சினையாக மாறியுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணம் என்று ஜனாதிபதிகூறியுள்ளார்.

நாளுக்குநாள் சனத்தொகை அதிகரித்து வரும் நாடு என்ற வகையில் காணிகள் தொடர்பில் அதிககவனத்துடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஆற்றங்கரை பிரதேசங்கள் அழிவடைவது தொடர்பாக கண்டறிந்து அவற்றைதவிர்ப்பதற்கான நடைமுறைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு விசேட குழுவொன்றைஅமைக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி அமைச்சும் நீர்ப்பாசன திணைக்களமும் இணைந்து இது தொடர்பில்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.