தோல்விக்கு நான் மட்டும் பொறுப்பா? அஜித் அதிரடி பதில் January 7, 2018

அஜித் எப்போதும் பேட்டிகள் என்று எதிலும் தலை காட்டாதவர். ஆனால், ஒரு சில வருடங்களுக்கு முன் தொடர் தோல்வியால் மிகவும் துவண்டு இருந்தார்.

அந்த சமயத்தில் அவருக்கு வாலி செம்ம ஹிட் அடிக்க, அப்போது ஒரு சில தொலைக்காட்சிகளில் பேட்டியளித்தார்.

அப்போது உங்களின் முந்தைய படங்களின் தொடர் தோல்விக்கு என்ன காரணம் என்று கேட்க, அதற்கு அஜித் கொஞ்சம் கோபமாகவே பதில் அளித்தார்.

அதில் ‘நான் மட்டும் கதை கேட்டு நடிப்பது இல்லை, தயாரிப்பாளும் அந்த கதையை கேட்டு ஓகே சொன்ன பிறகு தான் படம் தொடங்குகின்றது, அப்பறம் இந்த தோல்வியில் நான் மட்டும் எப்படி பொறுப்பாவேன்’ என்று கூறியுள்ளார்.