இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிககப்பு March 30, 2018

நல்லிணக்கபுரம் வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் இன்றையதினம் பொது மக்களிடம் கையளிககப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கீரிமலைப் பகுதியில் அமைக்கப்பட்ட இவ் வீடுகளை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க மற்றும் யாழ் அரச அதிபர் நா.வேதநாயகம் ஆகியோரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கபுர் வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக நூறு வீடுகள் ஏற்கனவே ஐனாதிபதியால் வழங் கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 25 வீடுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சின் நிதியில் ஒன்பது இலட்சம் ருபா செலவில் இந்த வீடிகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.