பிரதமாகிறார் நிமால் சிறிபால டி சில்வா !! கொழும்பு அரசியல் சூடு தணிகிறது February 16, 2018

மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஐதேகவை நீக்கி விட்டு மகிந்த ராஜபக்சவின் ஆதரவுடன், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராகக் கொண்ட ஆட்சியை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நேற்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

இது தொடர்பாக சிறிலங்கா அதிபருடன், சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பேச்சுக்களை நடத்திய போது, நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தருமாறு மைத்திரிபால சிறிசேன கோரியதாக கூறப்படுகிறது.

அவ்வாறு நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பதற்கு பெரும்பான்மை பலம் இருந்தால் அதனை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.