ஒருவரால் மற்ற விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அவமானம் January 7, 2018

ஒரு நடிகரின் ரசிகர் என்றால் அவருக்கு எந்த விதத்திலும் கெட்ட பெயர் வரக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அந்த நடிகரை விட ரசிகர்கள் தான் மக்களுக்கு ஓடி ஓடி உதவுவார்கள்.

ஆனால், சமீபத்தில் விஜய் ரசிகர் ஒருவர் செய்த வேலை ஒன்று ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் கோபப்படுத்தியுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு பல இளைஞர்கள் மோட்டர் ரேஸில் ஈடுப்பட்டனர், அதில் ஒரு இளைஞர் சாலையில் நின்ற பேரிகார்டை இழுத்து சென்றுள்ளார்.

இதை பேஸ்புக்கில் அவர் அப்லோட் செய்ய போலிஸார் அவரை கைது செய்துள்ளனர், மேலும், அந்த நபர் தீவிர விஜய் ரசிகர் என்பது தெரிய வந்துள்ளது.

இதனால், பல விஜய் ரசிகர்கள் அவரை கடுமையாக எச்சரித்துள்ளனர், அவரும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுள்ளார்.