காவிரி நதிநீரை எந்த ஒரு மாநிலமும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கோர முடியாது : உச்சநீதிமன்றம் February 16, 2018

 நூற்றாண்டுகளாக நீடிக்கிறது காவிரி நதிநீர் பிரச்சனை. தோடர்பாக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு வழங்கிய இறுதித் தீர்ப்ப்பில் 192 டி.எம்.சி.நீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் எனவும்  காவிரி நதிநீரை எந்த ஒரு மாநிலமும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கோர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பை எதிர்த்து கூடுதல் நீர் கோரி தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை அண்மையில் நிறைவடைந்து தீர்ப்பு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதியரசர் குழு காவிரி வழக்கில் காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க தொடங்கியது. அப்போது காவிரி நீரை எந்த ஒரு மாநிலமும் உரிமை கோர முடியாது என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.