9ஆவது  சர்வதேச வர்த்தக கண்காட்சி January 27, 2018

9ஆவது  சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை 
 ஆரம்பமானது. தொடர்ந்து மூன்று நாட்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. 

இன்றைய ஆரம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , மத்திய தொழில் துறை அமைச்சர் தயாகமகே , சிறுவர் மகளீர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜன் , யாழ்.மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இம்முறை நடைபெறும் இக் கண்காட்சியில் 300 காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் இந்திய வர்த்தக தொழித்துறை மன்றங்களை ஒன்றிணைந்த ‘ அசோக் சாம் ‘ அமைப்பில் உள்ள 75 இந்திய நிறுவனங்கள் நேரடியாக பங்கு பற்றுகின்றன  என்பது குறிப்பிடத்தக்கது.